Department Profile

About Us

நா.ம.ச.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையானது 1993ஆம்ஆண்டு பிறத்துறை மாணவிகளுக்கு பகுதி -1 பொதுத்தமிழ் பயிற்றுவிக்கும் துறையாக ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் 2004ஆம் ஆண்டுகல்லூரி நிர்வாகத்தின் சீரிய முயற்சியின் காரணமாக இளங்கலை தமிழ் பட்டப்படிப்பானது வெற்றிகரமாக தொடங்கப்பட்டு தமிழ்துறையானது தனிப்பெரும் துறையாக வளர்ந்து’ மாணவிகளின் திறன்வளர்ப்பதோடு தம் இலக்கிய பணியையும் நா.ம.ச.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

Objectives

இலக்கினை நிறைவேற்றும் வகையில் மாணவிகள் இன்று பலர் சமூகத்தில் ஆசிரியர் பயிற்சி’ மழலைப்பள்ளி ‘ஆராய்ச்சி சார்ந்த உயர்கல்வி’ அரசு பணிவாய்ப்புக்கான தேர்வுகள் போன்றவற்றிற்கு அரிய முயற்சி செய்து சாதனைகன் புரிந்து வருகின்றன.
வாழ்க தமிழ் !வளர்க தமிழ்!

Vision

  • தமிழ்த்துறை மாணவிகளுக்கு பண்பாட்டு கலாச்சாரத்தை வலியுறுத்தும் விதமாகவும்.
  • நூலறிவின் மேன்மையைப் புலப்படுத்தும் விதமாகவும்.
  • நல்லறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாகவும் அமைந்துள்ளது.
  • தமிழ் மொழியின் பெருமை தமிழின் பயன்பாடு ஆகியவை வாழ்வின் ஆதாரமாகஇ விளங்குகிறது.
  • தமிழர்களின் வாழ்க்கை முறையை வலியுறுத்தி சிறந்த இளைய தலைமுறையினை உருவாக்குவதே எம் துறையின் கருத்துருவாகும்.

Mission

  • எம்முடைய மாணவிகள் தமிழ் மொழியின் பெருமையை அறியும் வகையில் வாசிப்பு திறன்இ பேச்சாற்றல்இவாக்கிய அமைப்புமுறை போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
  • இக்காலத்தில் வளர்ந்து வரும் துறையான மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் மாணவிகளை பங்கேற்க செய்வதற்காகவும் பயிற்சி அளிக்கும் விதமாக இதழ் உருவாக்கும் கலையும் அறியசெய்தல் போன்ற திறன் வளர்க்கப்படுகிறது.
  • நடத்தப் பெறும் போட்டி மற்றும் தகுதித் தேர்வில் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் பாடத்திட்டத்துடன் இணைந்த தமிழ்; பயன்பாட்டு சிறப்புப் பயிற்சியளித்து வருகிறோம்
  • கணிணி பயன்பாட்டின் ;மூலம் இலக்கியங்களின் மேன்மையை அறியச்செய்யும் நிலையினையும் வரலாற்றுச் சிறப்பை உணர்ந்து செயல்படும் இளைய சமுதாயத்தை உருவாக்குவதும் ஆகும்.

Goals

  • பண்டைய கால தமிழர் மரபு, கலாச்சாரம், செம்மொழி இலக்கியம், இலக்கணப்புலமை மற்றும் தமிழ் வழி கணினி பயன்பாடு போன்றவற்றை அறிந்து கொண்டு மாணவிகள் கல்வியில் உயர்நிலை, ஆசிரியர்,பேராசிரியர் மற்றும் அரசு பணிவாய்ப்பு போன்று பல்வேறு களங்களை அடையும் வகையில் எம் துறை இலக்குகளை வகுத்துள்ளது.

Department of Tamil